TNPSC Thervupettagam

விலங்கு மற்றும் தாவரக் கண்டுபிடிப்புகள் 2025

July 8 , 2026 16 hrs 0 min 23 0
  • கொல்கத்தாவில் நடைபெற்ற இந்திய விலங்கியல் ஆய்வகத்தின் (ZSI) 111-வது நிறுவன தினத்தின் போது விலங்கு கண்டுபிடிப்புகள்-2025 மற்றும் தாவர கண்டுபிடிப்புகள் - 2025 ஆகிய அறிக்கைகள் வெளியிடப்பட்டன.
  • விலங்கு கண்டுபிடிப்புகள்-2025 அறிக்கையானது, 483 புதிய சிற்றினங்கள் மற்றும் இந்தியாவில் முதல்முறையாகப் பதிவு செய்யப்பட்ட 226 சிற்றினங்கள் உட்பட இந்தியாவின் விலங்கினங்களில் 709 புதிய சேர்ப்புகளைப் பதிவு செய்துள்ளதுடன் இதன் மூலம் மொத்த விலங்கினப் பல்லுயிரியம் 105,953 சிற்றினங்களாக உயர்ந்து உள்ளது.
  • தாவர கண்டுபிடிப்புகள்-2025 அறிக்கையானது, அறிவியலுக்குப் புதிய 221 வகைப்பாடுகள் (taxa) மற்றும் இந்தியாவுக்கான 132 புதிய பரவல் பதிவுகள் உட்பட இந்தியாவின் தாவர இனங்களில் 353 புதிய சேர்ப்புகளைப் பதிவு செய்துள்ளது.
  • கேரளாவில் அதிக அளவிலான புதிய விலங்கு கண்டுபிடிப்புகள் (98) பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் அருணாச்சலப் பிரதேசத்தில் அதிக அளவிலான புதிய தாவர கண்டுபிடிப்புகள் (49) பதிவாகியுள்ளன.
  • இந்தியாவின் பல்லுயிரியத்தை ஆவணப்படுத்துவதற்காக விலங்கினங்களுக்கான அறிக்கையை இந்திய விலங்கியல் ஆய்வகமும் (ZSI), தாவரங்களுக்கான அறிக்கையை இந்திய தாவரவியல் ஆய்வகமும் (BSI) ஆண்டுதோறும் வெளியிடுகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்