அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் புதிய வகையிலான துடுப்பு இல்லாத விலாங்கு மீன் இனங்களைக் கண்டறிந்துள்ளனர்.
இந்த இனமானது ஆப்டெரிக்டஸ் இனத்தைச் சேர்ந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் கலாச்சார, மொழியியல், வரலாற்று மற்றும் புவியியல் முக்கியத்துவத்தை கௌரவிக்கும் வகையில் இதற்கு ஆப்டெரிக்டஸ் கன்னியகுமாரி என்று பெயரிடப்பட்டுள்ளது.
இது NBFGR குழுவினால் இந்தியக் கடற்கரையில் கண்டறியப்பட்ட 16வது இனமாகும்.