TNPSC Thervupettagam

விலைக் கண்காணிப்பு மற்றும் வள அலகு

August 24 , 2020 1730 days 657 0
  • தேசிய மருந்துப் பொருள் விலை நிர்ணய ஆணையமானது (National Pharmaceutical Pricing Authority - NPPA) கர்நாடக மாநில மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையுடன் இணைந்து, அம்மாநிலத்தில் “விலைக் கண்காணிப்பு மற்றும் வள அலகை(Price Monitoring and Resource Unit - PMRU) திறந்து வைத்துள்ளது.
  • மாநிலத்தில் மருந்துகளின் விலையைக் கண்காணிக்கவும் இந்த மருந்துகளின் இருப்பை உறுதி செய்யவும் NPPAவிற்கு உதவுவதே PMRU அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.
  • நாட்டில் மருத்துவ மருந்துகளின் விலையைக் கட்டுப்படுத்தும் NPPA ஆனது 1997 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஒரு அரசு ஒழுங்குமுறை ஆணையமாகும்.
  • PMRU அமைக்கப்பட்ட 12வது மாநிலம் கர்நாடகம் ஆகும்.
  • ஏற்கனவே அமைக்கப் பட்டவை – கேரளா, ஒடிஷா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, நாகாலாந்து, திரிபுரா, உத்தரப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம் மற்றும் மிசோரம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்