விளைநிலங்களில் நிலையான பசுமைப் பரவலுக்கானத் திட்டம்
November 18 , 2021 1341 days 665 0
வேளாண் நிலங்களில் நீடித்தப் பசுமைப் பரவலுக்கான தமிழ்நாடு இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்த இயக்கத்தின் கீழ் 73 லட்சத்துக்கும் அதிகமான உயர் மதிப்பு மரக்கன்றுகள் வழங்கப் பட்டன.
தேக்கு, செம்மரம், அக்கேசியா, வேங்கை, சந்தனம், மஞ்சள் கடம்பு, கருங்காலி மரம் (ரோஸ்வுட்), மலைவேம்பு, மஹாகோனி, கருமருது மற்றும் பூவரசு ஆகிய உயர் மதிப்புள்ள மர வகைகள் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட உள்ளது.