2030 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்னதாக, விளையாட்டு வீரர்களுக்கான மரபணு தரவுத் தளத்தை உருவாக்குவதற்காக குஜராத் மாநிலம் விளையாட்டு மரபணு திட்டத்தை தொடங்கியுள்ளது.
மரபணு, உடலியல் மற்றும் செயல்திறன் தரவுகளை இணைத்து குஜராத் விளையாட்டு வீரர்களின் மரபணு தரவுத் தளத்தை உருவாக்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
வேகம், சகிப்புத்தன்மை மற்றும் வலிமை போன்ற பண்புகளின் அடிப்படையில் திறமைகளை முன்கூட்டியே கண்டறிவதில் இது கவனம் செலுத்துகிறது.
தடகளச் செயல்திறனில் மரபணுக் காரணிகள் 66% வரை பங்களிப்பதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
காயங்களைத் தடுத்தல், தனிப் பயனாக்கப்பட்ட பயிற்சி மற்றும் செயல்திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு இது துணைபுரிகிறது.
மரபணுப் பாகுபாடு, தனியுரிமைப் பிரச்சினைகள் மற்றும் விளையாட்டு வீரர்களின் தரவுகளை அறநெறிப் படி பயன்படுத்துதல் ஆகியவை இது தொடர்பான கவலைகள் ஆகும்.