கேரள மாநிலத்தின் விழிஞ்சத்தில் இந்தியாவின் முதலாவது ஆழ்கடல் போக்குவரத்து துறைமுகத்தினை பிரதமர் தொடங்கி வைத்தார்.
இது இந்தியாவின் முதல் ஆழ்கடல் கொள்கலன் போக்குவரத்து துறைமுகமாகும்.
மேலும் இது இந்தியாவின் முதல் பசுமை வழியான மற்றும் மித தானியங்கி வகையான துறைமுகம் ஆகும்.
இங்கு சரக்குக் கொள்கலன்கள் அவற்றின் இறுதி இலக்கை அடைவதற்கு முன்பு ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு மாற்றப்படுகின்றன.
இது வரை இந்தியாவில் ஆழ்கடல் கொள்கலன் பரிமாற்றத் துறைமுகம் இல்லை.
இந்தியா ஆண்டுதோறும் கொள்கலன் பரிமாற்றத்திற்காக 200 முதல் 220 மில்லியன் டாலர் (1,682-1,850 கோடி ரூபாய்) செலவிடுவதாக கூறப்படுகிறது.
இந்தத் துறைமுகம் ஆனது, பெரிய தானியங்கி CRMG (Cantilever Rail Mounted Gantry) பளு தூக்கிகளை இயக்குவதற்காக ஒன்பது பெண்களை, குறிப்பாக உள்ளூர் மீன்பிடிச் சமூகத்தைச் சேர்ந்தப் பெண்களைப் பணியமர்த்தியுள்ளது.
எந்தவொரு இந்தியத் துறைமுகத்திலும் பெண்கள் இது போன்ற ஒரு இயந்திரங்களை இயக்குவது இதுவே முதல் முறையாகும்.