விவசாயம் மற்றும் வனத்துறை மீதான நான்காவது ஆசியான்-இந்தியா அமைச்சரவைக் கூட்டம்
January 14 , 2018 2734 days 894 0
விவசாயம் மற்றும் வனத்துறை மீதான நான்காவது ஆசியான்-இந்தியா அமைச்சரவைக் கூட்டம் புதுதில்லியின் நாஸ்க் வளாகத்தில் நடத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்திற்கு இந்தியத் தரப்பில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங்கும் தாய்லாந்தின் சார்பில் விவசாயம் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் அமைச்சர் கிரிசடா யூன்ராச்சும் தலைமை தாங்கினர்.
கூட்டத்தின் நோக்கம்:
பயிர்கள், கால்நடைகள் மற்றும் மீன்வளத்தின் உற்பத்தி மற்றும் உற்பத்தித் தன்மையை அதிகரித்தல், தேசிய இயற்கை வள மேலாண்மை ஆகியவற்றிற்காக தொழில்நுட்பத்தை மேம்படுத்த கூட்டு ஆராய்ச்சியை மேம்படுத்துதல்.
இந்தப் பகுதியில் உணவு விநியோகத்தில் உள்ள விலையின் ஏற்ற இறக்கங்களை சரி செய்வதற்காக உணவுப் பாதுகாப்பில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திட நிபுணர் பரிமாற்றத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது
ஆகியனவாகும்.
விவசாயம் மற்றும் வனத்துறை மீதான 5வது ஆசியான்-இந்தியா அமைச்சரவைக் கூட்டம் 2019ல் புருனே தாருசலேமில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.