விவசாயிகளின் பங்கு குறித்த இந்திய அளவிலானக் கணக்கெடுப்பு
March 6 , 2025 317 days 256 0
இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) அதிகாரிகளால் இந்த இந்திய அளவிலான கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
விவசாயிகள், முக்கிய ராபி பருவப் பயிர்களுக்கான நுகர்வோர் விலையில் 40 முதல் 67 சதவீதம் வரையிலான பங்கைப் பெற்றனர்.
கோதுமை விவசாயிகள், நுகர்வோர் விலையில் 67 சதவீதப் பங்கைப் பெற்றுள்ளதுடன் மிகப்பெரிய பயனாளிகளாக உருவெடுத்துள்ளனர்.
அரிசி விவசாயிகள், சில்லறை விலையில் 52 சதவீத பங்கைப் பெற்றனர்.
விரைவில் கெட்டுப் போகும்/ அழுகக் கூடியப் பொருட்களின் (பழங்கள் மற்றும் காய்கறிகள்) விலையில் விவசாயிகளின் பங்கு ஆனது சுமார் 40-63 சதவீதம் என மதிப்பிடப் பட்டுள்ளது.
எண்ணெய் வித்துக்களில், 2021 ஆம் ஆண்டு அறிக்கை செய்த 55 சதவீத மதிப்பீட்டோடு ஒப்பிடும்போது, ராப்சீட் மற்றும் கடுகு (R&M) விவசாயிகளின் பங்கு 52 சதவீதமாக இருந்தது.