பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ள 2,500 க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மண் கார்பன் வரவுகளுக்கான (soil carbon credits) தனது முதல் நேரடிப் பலன் பரிமாற்றக் கொடுப்பனவுகளை இந்தியா வழங்கத் தொடங்கியுள்ளது.
இந்தக் கொடுப்பனவுகள் ₹2.9 கோடிக்கும் அதிகமாக இருந்தன, மேலும் இவை மீளுருவாக்க விவசாயத்திலிருந்து பெறப்பட்ட சரிபார்க்கப்பட்ட கார்பன் வரவுகளுடன் இணைக்கப்பட்டிருந்தன.
விவசாயிகள் 2019–2022 ஆம் ஆண்டுகளில் நேரடியாக விதைக்கப்பட்ட நெல், குறைக்கப் பட்ட உழவு மற்றும் பயிர் கழிவு மேலாண்மை முறைகளைப் பயன்படுத்தினர்.
ஆதி உழவர் கார்பன் திட்டம் 2019 ஆம் ஆண்டில் குரோ இண்டிகோ (Grow Indigo) நிறுவனத்தால் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் (ICAR) தொழில்நுட்ப வழிகாட்டுதலுடன் தொடங்கப்பட்டது.
இத்திட்டம் ஏழு மாநிலங்களில் 2 மில்லியன் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பையும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளையும் உள்ளடக்கியுள்ளது.
விவசாயிகளுக்கு தோராயமாக ₹3,000 முதல் ₹15,000 வரை கிடைத்துள்ளதுடன் இத்திட்டத்தின் மூலம் மதிப்பீடு செய்யப்பட்ட 45 பில்லியன் லிட்டர் தண்ணீர் சேமிக்கப் பட்டதுடன், 2 லட்சம் டன்களுக்கும் அதிகமான பயிர்க் கழிவுகள் எரிக்கப்படுவதும் தவிர்க்கப் பட்டது.