TNPSC Thervupettagam

விவசாயிகளுக்கு நேரடி பயன் பரிமாற்றம் 2.0

July 12 , 2019 2132 days 827 0
  • இரசாயனங்கள் மற்றும் உரத் துறை அமைச்சகமானது உர மானியங்களுக்கான நேரடி பயன் பரிமாற்றத்தின் (DBT – Direct Benefit Transfer) 2-ம் கட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • இது நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் கசிவுகள், சிறு திருட்டுகள் மற்றும் கறுப்பு சந்தைப்படுத்துதல் ஆகியவற்றைத் தடுக்கவும் அதன் மூலமாக விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்துவதற்குமான ஒரு படியாகும்.
  • இரண்டாம் கட்ட DBTயின் வசதிகள்:
    • DBT முகப்பு பலகை – உர இருப்பு நிலை தொடர்பான நிகழ்நேர அறிக்கைகள்
    • விற்பனை முனை (PoS - Point of Sale) 3.0 மென்பொருள் – DBT மென்பொருளில் பதிவு, உள்நுழைவு மற்றும் விற்பனை நடவடிக்கைகளை எளிதாக்குகிறது.
    • மேசைக் கணினி PoS பதிப்பு – அவசர நிலையை நிர்வகிக்க POS சாதனங்களுக்கு மாற்றாக அல்லது கூடுதல் வசதியாக இது உள்ளது.
  • இவை இரண்டுமே பன்மொழிப் பதிப்புகளில் கிடைக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்