விவாகரத்து வழக்குகளில் வாழ்க்கைத் துணைவர் குறித்த இரகசியப் பதிவுகள்
July 22 , 2025 15 hrs 0 min 21 0
வாழ்க்கைத் துணைவர்களுக்கிடையே மிகவும் இரகசியமாகப் பதிவு செய்யப்பட்ட சில உரையாடல்களை விவாகரத்து வழக்குகள் உள்ளிட்ட திருமணத் தகராறுகளில் ஆதாரமாகப் பயன்படுத்தலாம் என்று இந்திய உச்ச நீதிமன்றம் (விபோர் கார்க் எதிர் நேகா வழக்கு ) தீர்ப்பளித்தது.
வாழ்க்கைத் துணைவர்கள் ஒருவரையொருவர் உளவு பார்ப்பது திருமண உறவுகள் வலுவாக இல்லை என்பதற்கான ஒரு சான்றாகும், எனவே அதை நீதித்துறை இந்த நடவடிக்கைகளில் பயன்படுத்தலாம்.
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் ஆனது, வாழ்க்கைத் துணைவர்களுக்கு இடையேயான இரகசிய உரையாடல்கள் சாட்சியச் சட்டத்தின் 122வது பிரிவின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன என்றும் அவற்றை நீதித்துறை நடவடிக்கைகளில் ஆதாரமாகப் பயன்படுத்த முடியாது என்றும் தீர்ப்பளித்தது.
ஊழல் விசாரணையில் இரகசியமான தொலைபேசிப் பதிவுகள் ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப் பட்ட 1973 ஆம் ஆண்டு வழக்கை உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
தற்போது திருமணத் தகராறுகளுக்கும் இதனை விரிவுப்படுத்தியது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு ஆனது இந்தியச் சட்டத்தில் வாழ்க்கைத் துணைவரின் சிறப்புரிமை மற்றும் தனியுரிமை பற்றிய ஒரு புரிதலை நன்கு மாற்றி அமைக்கிறது.
பின்னணி
2017 ஆம் ஆண்டில் இந்தியாவில் தனியுரிமை ஓர் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப் படுவதற்கு முன்னதாக, 1872 ஆம் ஆண்டு சாட்சியச் சட்டம் இயற்றப் பட்டது.
வாழ்க்கைத் துணைவரின் சிறப்புரிமையானது திருமணமான துணைவர்கள் இடையேயான தனிப்பட்ட தகவல்தொடர்பைப் பாதுகாக்கிறது.
குற்றவியல் வழக்குகளில் ஒரு நபர் தனது வாழ்க்கைத் துணைக்கு எதிராக சாட்சியம் அளிக்க கட்டாயப்படுத்தப்படுவதை இது தடுக்கிறது.