விஷ்வகர்மா ராஷ்திரிய புரஷ்கார் மற்றும் தேசிய பாதுகாப்பு விருதுகள்
September 14 , 2018 2504 days 871 0
2013 ஆம் ஆண்டிற்கான விஸ்வகர்மா ராஷ்திரிய புரஷ்கார் மற்றும் தேசிய பாதுகாப்பு விருதுகளை (National Safety Awards - NSA) மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) அவர்கள் வழங்கினார்.
VRP (Vishwakarma Rashtriya Puraskar) ஆனது, ஒரு தொழிலாளி அல்லது தொழிலாளர்கள் குழுவினால் வழங்கப்படுகின்ற பரிந்துரைக்காகவும் நிறுவனத்தால் முந்தைய ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட அப்பரிந்துரைகளை அங்கீகரிப்பதற்காகவும் வழங்கப்படுகிறது.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகமானது விஸ்வகர்மா ராஷ்திரிய புரஷ்கார் (முன்பு ஷ்ரம் வீர் தேசிய விருதுகள் என்றழைக்கப்பட்டது) மற்றும் தேசிய பாதுகாப்பு விருதுகளை 1965ம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது.
NSA ஆனது, AERB (Atomic Energy Regulatory Board - அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம்) என்ற அமைப்பின் கீழ் உள்ள தொழில்துறை நிறுவனங்கள், கட்டுமானத் தளங்கள், துறைமுகங்கள் மற்றும் கட்டிட அமைப்புகள் போன்றவற்றின் தலைசிறந்த பாதுகாப்பு தொடர்பான செயல்திறனை அங்கீகரிப்பதற்காக வழங்கப்படுகிறது.