விஸ்டன் புத்தகத்தில் இடம் பெற்ற உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்கள்
April 20 , 2024 375 days 452 0
2024 ஆம் ஆண்டு விஸ்டன் கிரிக்கெட் வீரர்களின் அல்மனாக் புத்தகத்தில் பாட் கம்மின்ஸ் (ஆடவர்) மற்றும் நாட் ஸ்கிவர்-பிரண்ட் (மகளிர்) ஆகியோர் உலகின் முன்னணி கிரிக்கெட் வீரர்களாக இடம் பெற்றுள்ளனர்.
ஸ்கிவர் ப்ரண்ட், மகளிருக்கான ஆஷஸ் போட்டியில் அவரது ஆட்டத்திற்காக சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
விஸ்டன் புத்தகத்தின் ஆண்டின் சிறந்த ஐந்து கிரிக்கெட் வீரர்களில் மிட்செல் ஸ்டார்க், உஸ்மான் கவாஜா மற்றும் ஆஷ்லே கார்ட்னர் ஆகிய மூன்று ஆஸ்திரேலிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
மேற்கிந்திய அணிகளின் ஆல்ரௌண்டர் ஹேலி மேத்யூஸுக்கு டி20 கிரிக்கெட் போட்டிகளின் முன்னணி வீரர் விருது வழங்கப் பட்டுள்ளது.