விஸ்டென் வழங்கும் ‘ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள்’
April 23 , 2022 1233 days 598 0
இந்திய அணித் தலைவர் ரோஹித் சர்மா மற்றும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் 2022 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுத் துறைக்கான விஸ்டெனின் புள்ளி விவரப் புத்தகத்தில், ‘ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள்’ என்ற பிரிவில் சேர்க்கப்பட்ட 5 வீரர்களுள் ஒருவராக இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிவோன் கான்வே, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஒல்லே ராபின்சன் மற்றும் தென் ஆப்பிரிக்க பெண் நட்சத்திரக் கிரிக்கெட் வீரர் டேன் வான் நிகெர்க் ஆகியோருடன் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
2022 ஆம் ஆண்டு விஸ்டென் கிரிக்கெட் வீரர்கள் புள்ளி விவரப் புத்தகமானது, ஐக்கிய இராஜ்ஜியத்தில் வெளியிடப்பட்ட ஒரு கிரிக்கெட் குறிப்புப் புத்தகமாகும்.
இது உலகின் மிகவும் ஒரு பிரபலமான விளையாட்டுத் துறைப் புத்தகத்தின் 159வது பதிப்பாகும்.
இது 1864 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படுகிறது.