வீட்டு மனைத் துறையில் முதலீட்டிற்கான உலகளாவிய இலக்குகள்
June 11 , 2024 431 days 355 0
மார்ச் மாத காலாண்டிற்கான, நிலம் மற்றும் மேம்பாட்டுத் தள முதலீடுகளில் உலக அளவிலான நாடுகளுக்கிடையேயான முன்னணி முதலீட்டு இடங்களில் ஒன்றாக இந்தியா இடம் பிடித்துள்ளது.
இதில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 55% முதலீடுகளைக் கொண்டுள்ளனர்.
மேலும் குறிப்பிடத்தக்க வகையில், புதிய வெளிநாட்டு முதலீடுகளில் 73% பேர் ஆயத்த நிலை சொத்துக்களில் முதலீடு செய்வதை இலக்காகக் கொண்டுள்ளனர்.
இந்திய வீட்டுமனை விற்பனை துறையில் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு முதலீடுகளானது 2023 ஆம் ஆண்டில் சுமார் 3.6 பில்லியன் டாலர்களை எட்டியது என்ற நிலையில் இது இந்தியாவின் மொத்த முதலீட்டு வருவாயில் 67% ஆகும்.