இராணுவ நடவடிக்கைகளின் போது அவர்கள் ஆற்றிய துணிச்சல் மிக்கப் பங்களிப்பிற்காக இந்திய ஆயுதப் படைகளின் வீரர்களுக்கு 13 சௌர்ய சக்ரா விருதுகளை இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் வழங்கினார்.
இவற்றுள் வீரர்களின் மரணத்திற்குப் பின் வழங்கப்பட்ட ஆறு விருதுகளும் அடங்கும்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இராணுவ விருது வழங்கும் விழாவில், இராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே அவர்களுக்கு, அவரது சிறப்பான சேவையைப் பாராட்டி பரம் விசிஷ்ட் சேவா என்ற பதக்கம் வழங்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் அவர்கள் 14 பரம் விசிஷ்ட் சேவா பதக்கங்கள், நான்கு உத்தம் யுத் சேவா பதக்கங்கள் மற்றும் 24 அதி விஷிஷ்ட் சேவா பதக்கங்கள் ஆகியவற்றை அவர்களது சிறப்பானச் சேவைக்காக வேண்டி வீரர்களுக்கு வழங்கினார்.