TNPSC Thervupettagam

வீரதீர விருதுகள் 2021

November 25 , 2021 1334 days 565 0
  • இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள், டெல்லியிலுள்ள இராஷ்டிரபதி பவனில் நடைபெற்றப் பாதுகாப்புத் துணிகர சாகச விழாவில் வீரதீர விருதுகள் மற்றும் சிறப்பான சேவைகளுக்கான விருதுகளை வழங்கினார்.
  • ஆயுதப்படை அதிகாரிகளின் துணிச்சல் மற்றும் தியாகத்தினைப் போற்றும் வகையில் இந்திய அரசானது வீரதீர விருதுகளை வழங்கத் தொடங்கியது.
  • இந்த விருதுகளின் முன்னுரிமை வரிசையானது பரம் வீர் சக்ரா, அசோக் சக்ரா, மகாவீர் சக்ரா, கீர்த்தி சக்ரா, வீர் சக்ரா மற்றும் செளரியா சக்ரா ஆகியனவாகும்.
  • 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடைபெற்றத்  தாக்குதலில் பாகிஸ்தான் போர் விமானங்களைப் பின்னடையச் செய்ததில் தான் ஆற்றியப் பங்கிற்காக அணித் தலைவர் அபிநந்தன் வர்த்தமானுக்கு வீர் சக்ரா விருதானது வழங்கப் பட்டது.
  • ஜம்மு & காஷ்மீரில் நடைபெற்ற ஒரு ராணுவ நடவடிக்கையில் தீவிரவாதிகளை ஒடுக்கியதற்காக வேண்டி இந்தியாவின் இரண்டாவது உயரிய அமைதிக்கால வீரதீர விருதான கீர்த்தி சக்ரா விருதானது பிரகாஷ் ஜாதவ் (அவரின் மரணத்திற்குப் பின்) என்பவருக்கு வழங்கப் பட்டுள்ளது.
  • இந்திய விமானப்படைத் தலைவர் விவேக் R. சவுதாரி மற்றும் கடற்படைத் தலைமைத் தளபதி துணை அட்மிரல் R. ஹரிக் குமார் ஆகியோரும் பரம் விசிஷ்ட் சேவா என்ற பதக்கத்தைப் பெற்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்