TNPSC Thervupettagam

வீர வசந்தராயர் மண்டபம் சீரமைப்பு

September 7 , 2026 6 days 96 0
  • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள வீர வசந்தராயர் மண்டபம் மறு சீரமைக்கப் பட்டு, 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று முறைப்படி திறக்கப்பட்டது.
  • இந்த மண்டபம் மன்னர் திருமலை நாயக்கரின் சகோதரரான முத்து வீரப்ப நாயக்கரால் கி.பி 1611 இல் கட்டப்பட்டது. மேலும் இது கோவிலின் கிழக்கு கோபுரத்திற்கு அருகே அமைந்துள்ளது.
  • இதிலுள்ள 136 தூண்களில், 79 ஒற்றைக்கல் தூண்கள் ஸ்தபதி வி.பி. வேல்முருகன் தலைமையிலான சுமார் 150 சிற்பிகளால் புதிதாக செதுக்கப்பட்டுள்ளன.
  • ஒவ்வொரு புதிய தூணும் 18.6 அடித் தண்டை கொண்டிருந்ததுடன், சிங்க உருவங்கள் உள்ளிட்ட மேற்பகுதி கூறுகளைச் சேர்த்த பிறகு சுமார் 29 அடியை எட்டியது.
  • மண்டபத்தில் உள்ள ஒரு கல் தொட்டிக்குள் அமைந்துள்ள சுந்தரேஸ்வரர் சன்னதியை நோக்கியவாறு உள்ள நந்தியானது முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்ததாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்