அடுத்த ஐந்து ஆண்டுகளில் பால் கொள்முதலை 50% அதிகரிக்க இந்திய அரசு வெண்மைப் புரட்சி 2.0 ஐத் தொடங்கியுள்ளது.
இந்த முயற்சியை கூட்டுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
2028–29 ஆம் ஆண்டுக்குள் தினசரி பால் கொள்முதலை 1,007 லட்சம் கிலோகிராமாக உயர்த்துவதே இதன் இலக்கு ஆகும்.
சுமார் 75,000 புதிய பால் கூட்டுறவு சங்கங்கள் (DCS) உருவாக்கப்படும் என்பதோடுமேலும் தற்போதுள்ள 46,422 DCSகள் வலுப்படுத்தப்படும்.
இந்தத் திட்டம் கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் தேசிய பால் மேம்பாட்டுத் திட்டம் 2.0 என்பதின் கீழ் நிதியளிக்கப்படுகிறது.
இந்தியாவின் பால் பண்ணை தொழிலாளர் தொகுப்பில் கிட்டத்தட்ட 70% பெண்கள் உள்ளனர் என்ற நிலையில் இந்தத் திட்டம் அதிக பெண் பால் பண்ணையாளர்களை கூட்டுறவு அமைப்புகளுக்குள் கொண்டுவருவதில் கவனம் செலுத்துகிறது.
விவசாயிகளின் வருமானம், கிராமப்புற வேலைவாய்ப்பு, ஊட்டச்சத்து மற்றும் பெண்களின் பொருளாதார அதிகாரமளிப்பை நன்கு மேம்படுத்துவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.