வெப்பக் குறியீட்டு அடிப்படையிலான காப்பீட்டுத் திட்டம்
June 12 , 2023 806 days 456 0
இந்தியாவின் ஒரு முன்னணி தனியார் பால்பொருட்கள் நிறுவனமான கர்நாடகாவின் mooMark, பால் பண்ணையாளர்களுக்கு வெப்பக் குறியீட்டு அடிப்படையிலான காப்பீட்டு வசதியினை வழங்கும் முதல் நிறுவனம் ஆகும்.
சுட்டெரிக்கும் கோடை மாதங்களில் பால் விற்பனை குறைவதால் ஏற்படும் வருமான இழப்பிலிருந்து பால் பண்ணையாளர்களை பாதுகாக்கச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
வெப்ப அலைகளின் போது பால் உற்பத்தி குறைவதால் ஏற்படும் வருவாய் இழப்புக்குப் பால் பண்ணையாளர்களுக்கு இதன் மூலம் நிதி இழப்பீடு வழங்கப்படும்.