ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையம் (JNCASR), சிட்னி பல்கலைக் கழகம் மற்றும் இந்திய அறிவியல் கழகம் (IISc) ஆகியவற்றைச் சேர்ந்த அறிவியலாளர்கள், பாடப்புத்தகத்தில் உள்ள வரம்பை விட 1,000 மடங்கு அதிக வெப்பமின்னழுத்தத்தை உருவாக்கும் படிகத்தை உருவாக்கியுள்ளனர்.
அவர்கள் மெக்னீசியத்துடன் கலக்கப்பட்ட ஸ்காண்டியம் நைட்ரைடு (ScN) மெல்லிய படலங்களைப் பயன்படுத்தி அதிக அளவில் கலக்கப்பட்ட, அதிக ஈடுசெய்யப்பட்ட குறைக்கடத்தியை உருவாக்கினர்.
வெப்பநிலை வேறுபாட்டை மின்னழுத்தமாக மாற்றும் சீபெக் விளைவின் நீண்ட காலமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வரம்பிற்கு இந்தக் கண்டுபிடிப்பு சவால் விடுகிறது.
இந்தப் பொருள் அதிநுண்ணிய வெப்பநிலை உணரிகள், வெப்பக் கண்டுபிடிப்பான்கள் மற்றும் குவாண்டம் உணர்திறன் சாதனங்களை ஆதரிக்க முடியும்.
எக்ஸ்-கதிர் விளிம்புச்சிதறல் மற்றும் அணுத் தெளிவுத்திறன் எலக்ட்ரான் நுண்ணோக்கி ஆகியவற்றைப் பயன்படுத்தி, அந்தப் படலங்கள் ஒற்றைப் படிகத் தன்மை கொண்டவை மற்றும் புறவடுக்குப் படலங்கள் என உறுதி செய்யப்பட்டன.