மேகி எனப்படும் ஒரு வெப்பமண்டலப் புயலானது பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பாதிப்பினை ஏற்படுத்தி குறைந்தபட்சம் 167 பேரின் உயிரைப் பறித்துப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
தேசியப் பேரிடர் அமைப்பின் தகவல்படி, மேலும் 110 நபர்கள் காணாமல் போய் விட்டதாகவும் 1.9 மில்லியன் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இது 2022 ஆம் ஆண்டில் பசிபிக் பகுதியில் புயல் உருவாகும் பருவத்தின் 3வது வெப்ப மண்டலத் தாழ் அழுத்த நிலை மற்றும் 2வது வெப்பமண்டலப் புயலாகும்.