வெம்பக்கோட்டையில் அரிதான கடுமட்பாண்டம் கண்டெடுப்பு
September 15 , 2023 595 days 385 0
விருதுநகர் மாவட்டத்தின் வெம்பக்கோட்டையில் மாநிலத் தொல்லியல் துறையின் அகழாய்வின் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
ஒரு திரவம் நிரம்பி வழியும் வரை கொதிக்க வைக்கப்பட்ட நிலையிலான ஒரு சுடுமட்பாண்டம் மற்றும் ஒரு விளக்கு ஆகியவை இந்தத் தளத்தில் கண்டெடுக்கப் பட்டது.
அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட இடத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிவசங்குப்பட்டி கிராமத்தில் சேதமடையாத இரண்டு முதுமக்கள் தாழிகள் உட்பட நான்கு முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
முதற்கட்டத்தில் 3,000க்கும் மேற்பட்டத் தொல்பொருட்கள் இங்கு கண்டெடுக்கப் பட்டு உள்ளன.
மணிகள், பொம்மைகள், கடுமட்பாண்டங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான சங்கு வளையல்கள் ஆகியவை இதில் அடங்கும்.