TNPSC Thervupettagam

வெய்மர் முக்கோணம் அமைப்பு

January 15 , 2026 7 days 77 0
  • இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரான்சு, ஜெர்மனி மற்றும் போலந்துடன் சேர்ந்து வெய்மர் முக்கோண அமைப்புடனான இந்தியாவின் முதல் ஈடுபாட்டில் பங்கேற்றார்.
  • வெய்மர் முக்கோணம் என்பது பிரான்சு, ஜெர்மனி மற்றும் போலந்து ஆகிய நாடுகளின் பிராந்திய அரசியல் குழுவாகும்.
  • இது 1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று ஜெர்மனியின் வெய்மரில் வெளியிடப் பட்ட ஒரு கூட்டு அறிவிப்பின் மூலம் உருவாக்கப்பட்டது.
  • ஜெர்மனிக்கும் போலந்துக்கும் இடையிலான நல்லிணக்கத்தில் பிரான்ஸை ஈடுபடுத்துவதே இதன் நோக்கங்களில் ஒன்றாகும்.
  • மூன்று நாடுகளுக்கு இடையேயான அரசியல் பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே மற்றொரு நோக்கம் ஆகும்.
  • வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) போலந்தின் ஒருங்கிணைப்பையும் இது ஆதரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்