TNPSC Thervupettagam

வெற்றிப் பயணம் திட்டம் - தமிழ்நாடு

October 4 , 2026 2 days 115 0
  • தமிழ்நாடு முதலமைச்சர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 2 அன்று சென்னையில் உள்ள கோயம்பேட்டில் விரிவாக்கப்பட்ட வெற்றிப் பயணம் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் என்ற நிலையில் இதன் மூலம் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
  • இத்திட்டம் 2021 ஆம் ஆண்டு மே மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட முந்தைய மகளிர் விடியல் பயணம் திட்டத்தை விரிவுபடுத்துகிறது.
  • இந்த விரிவாக்கமானது, முன்பு உள்ளடக்கப்பட்ட சாதாரண பேருந்து சேவைகளுடன் கூடுதலாக, 40 கி.மீ தூரத்திற்கு அப்பால் உள்ள விரைவு, சொகுசு, புறநகர் சாதாரண மற்றும் மலைவாழ் சாதாரணப் பேருந்துகள், குறைந்த நிறுத்தங்களைக் கொண்ட சேவைகள் (LSS) ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • விரிவாக்கப்பட்ட இத்திட்டத்திலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் (SETC) பேருந்துகள் விலக்கப்பட்டுள்ளன.
  • ஏழு மாநிலப் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் திட்டமிடப்பட்ட பேருந்துகளில் கிட்டத்தட்ட 69% அளவிலான சுமார் 12,692 அரசுப் பேருந்துகளை இத்திட்டம் உள்ளடக்கியது.
  • இலவசப் பயணங்களைப் பதிவு செய்ய மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் (ETM) அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டன; இதன் சோதனை ஓட்டங்கள் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று நடத்தப்பட்டன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்