வெளிநாடுகளில் உள்ள உறவினர்கள் அனுப்பு தல் மூலம் வரும் பணவரவு
July 10 , 2022 1041 days 481 0
வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் (FCRA) தொடர்பான சில விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் திருத்தி அமைத்துள்ளது.
வெளிநாட்டில் உள்ள உறவினர்களிடமிருந்து இந்தியர்கள் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல், ஒரு வருடத்திற்கு 10 லட்சம் ரூபாய் வரை பெற இந்தச் சட்டம் அனுமதிக்கிறது.
இதற்கான முந்தைய வரம்பு ரூ.1 லட்சமாக இருந்தது.
தொகை இந்த வரம்பைத் தாண்டினால், தனிநபர்கள் அரசாங்கத்திற்குத் தெரிவிப்பதற்கு முன்பு விதிக்கப்பட்டிருந்த 30 நாட்கள் என்ற வரம்பிற்குப் பதிலாக தற்போது 90 நாட்கள் என்ற வரம்பு விதிக்கப்படும்.
திருத்தப்பட்ட விதிகள் ஆனது, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் அல்லது தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அத்தகைய நிதியைப் பயன்படுத்துவதற்கு அவற்றால் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகள் குறித்து உள்துறை அமைச்சகத்திற்குத் தெரிவிக்க 45 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது.