TNPSC Thervupettagam

வெளிநாடு செல்வதற்கான உரிமை

April 27 , 2019 2276 days 769 0
  • வெளிநாடு செல்வதற்கான உரிமையானது திருமணம் மற்றும் குடும்பம் போன்று ஒரு உண்மையான மற்றும் அடிப்படை மனித உரிமையானது என்று இந்திய உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
  • சதீஷ் சந்திர வெர்மா எதிர் இந்திய அரசு என்ற வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டுப் பிரிவைச் சேர்ந்த இந்தியக் காவல்துறை அதிகாரியான சதீஷ் சந்திரா என்பவருக்குத் துறைசார் நடவடிக்கைகளின் காரணமாக தனிப்பட்ட அயல்நாட்டுப் பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
  • இந்திய உச்ச நீதிமன்றமானது 1978 ஆம் ஆண்டில் மேனகா காந்தி எதிர் இந்திய அரசு என்ற வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பைக் குறிப்பிட்டு அவருக்கு வெளிநாடு செல்வதற்கான உரிமையை உறுதி செய்தது.
  • மேலும் இது 1958 ஆம் ஆண்டில் கெண்ட் எதிர் டுல்லீஸ் என்ற வழக்கில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையும் மேற்கோள் காட்டியது.
  • இந்த தீர்ப்பானது, “வெளிநாடு செல்வதற்கான உரிமையானது சமூக மதிப்பு மிக்கது என்றும் பெரும் முக்கியத்துவம் வாய்ந்த அடிப்படை மனித உரிமையை அது பிரதிபலிக்கிறது” என்றும் கூறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்