வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அஞ்சல் வாக்குகள் இல்லை
March 2 , 2021 1621 days 703 0
ஐந்து மாநிலங்களில் நடைபெறவிருக்கும் தேர்தல்களில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அஞ்சல் வாக்கு மூலம் வாக்களிக்க இயலாது என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது ஒரு வாக்காளர் தொலைதூரத்தில் இருந்து வாக்களிக்கக் கூடிய ஒரு வசதியாகும்.
வாக்குச் சீட்டில் அவர்கள் விருப்பத்தைப் பதிவு செய்வதன் மூலம் வாக்காளர் வாக்களிப்பர்.
பின்னர் வாக்குகளை எண்ணுவதற்கு முன் வாக்காளர் அதைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைப்பார்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 என்ற சட்டத்தின் பிரிவு 60 என்பதின் கீழ், ஒருவருக்கு அஞ்சல் வாக்குகள் வசதியானது வழங்கப்படுகிறது.