மத்திய உள்துறை அமைச்சகமானது பகுதியளவு நீதித்துறை சார்ந்த வெளிநாட்டவர்களுக்கான தீர்ப்பாயங்களை அமைப்பதற்காக அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது.
இந்தத் தீர்ப்பாயங்கள் இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள நபர்கள் வெளிநாட்டவரா அல்லது இல்லையா என்பது குறித்து முடிவெடுக்கும்.
இதற்கு முன்பு மத்திய அரசு மட்டுமே இந்த அதிகாரத்தைக் கொண்டிருந்தது.
மேலும் இது தனிநபர்கள் தீர்ப்பாயங்களை அணுகுவதற்கும் அதிகாரங்களை வழங்கியுள்ளது.
இதற்கு முன்பு சந்தேகத்திற்கிடமான வெளிநாட்டவர்களுக்கு எதிராக மாநில அரசு மட்டுமேத் தீர்ப்பாயத்தை நாட முடியும்.