வெளிநாட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் பணம் அனுப்புதலுக்கான சர்வதேச தினம் - ஜூன் 16
June 18 , 2023 835 days 287 0
புலம் பெயர்ந்தத் தொழிலாளர்களின் முக்கியத்துவத்தைப் பேணுவதற்கும், அவர்களின் குடும்பங்களைப் பேணுவதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவையான முயற்சிகளையும் இந்த நாள் அங்கீகரிக்கிறது.
பணம் அனுப்புதல் அல்லது அன்பளிப்பாக வழங்கப் படும் தொகையைப் பண வரவு எனும் பதம் குறிக்கிறது.
பெரும்பாலும் கிராமப்புறங்களில் இருந்து செல்லும் புலம்பெயர்ந்தத் தொழிலாளர்கள், தங்கள் குடும்பத்தை காப்பாற்ற உதவுவதற்காக, அவர்களது சொந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் சொற்ப ஊதியம் வழங்கும் தொழில்களை செய்கிறார்கள்.
2023-2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "நிதி உள்ளடக்கம் மற்றும் செலவுக் குறைப்பிற்காக எண்ணிம அடிப்படையில் பணம் அனுப்புதல்" என்பதாகும்.
இந்தத் தினமானது, 2018 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.