வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளம்
November 14 , 2025 7 days 40 0
தேசியப் பத்திரங்கள் வைப்புத்தொகை லிமிடெட் (NSDL) நிறுவனமானது, வெளிநாட்டுத் தொகுப்பு முதலீட்டாளர்கள் (FPI) மற்றும் வெளிநாட்டுத் துணிகர மூலதன முதலீட்டாளர்கள் (FVCI) ஆகியவற்றிற்கான ஒருங்கிணைந்த டிஜிட்டல் வலை தளத்தினைத் தொடங்கியுள்ளது.
இந்தியாவின் மூலதனம் மற்றும் பத்திரச் சந்தைகளில் முதலீடு மேற்கொள்ளும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான பதிவு மற்றும் இணக்கத்தை இந்தத் தளம் நெறிப் படுத்துகிறது.
இது பல உள்நுழைவுகள் மற்றும் நேரடி நடைமுறைகளைகளுக்கு மாற்றாக, FPI மற்றும் FVCI பதிவுகளை ஒரே இடைமுகமாக ஒருங்கிணைக்கிறது.
இந்த அமைப்பில் தானியங்கி நிரந்தர கணக்கு எண் (PAN) கோரிக்கைகள், வழி காட்டப் பட்டச் செயல்பாடுகள், விண்ணப்பக் கண்காணிப்பு மற்றும் முழு தணிக்கை தடங்கள் உள்ளன.
1996 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட NSDL ஆனது, அதன் வைப்புத்தொகை வலையமைப்பு மூலம் இந்தியா முழுவதும் மின்னணுமயமாக்கப்பட்ட வடிவத்தில் பத்திரங்களை நிர்வகிக்கிறது.