- ஆக்ஸிஜனை அல்லாமல், மின்சாரத்தை வெளியிடுவதன் மூலம் உயிர் வாழும் ஒரு புதிய பாக்டீரியாக்களை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
- இந்தச் செயல்முறையானது வெளிப்புற/புறச்செல்லுலார் சுவாசம் என்று அழைக்கப் படுகிறது.
- இது பாக்டீரியாவினை அருகிலுள்ள மேற்பரப்புகளுக்கு எலக்ட்ரான்களை அனுப்ப அனுமதிக்கிறது.
- இந்தச் செயல்முறையானது ஆழ்கடல் துவாரங்கள் அல்லது மனித குடல் போன்ற ஆக்ஸிஜன் இல்லாதச் சூழல்களிலும் ஆற்றலை உருவாக்க உதவுகிறது.
- இதைச் செய்வதன் மூலம், அவை தொடர்ந்து வளர்ந்து ஆற்றலை உருவாக்குகின்றன.
- இந்தப் பாக்டீரியாக்கள் நாப்தோகுவினோன் எனப்படுகின்ற இயற்கை மூலக்கூறைப் பயன்படுத்துகின்றன.
- இது செல்லுக்குள் உள்ள எலக்ட்ரான்களுக்கு ஒரு சிறிய ஏற்றுக் கலம் போலச் செயல் படுகிறது.
- இது அவற்றை எடுத்து அருகிலுள்ள கடத்தும் மேற்பரப்புகளுக்கு கொண்டு செல்கிறது.
- அங்கு சென்றதும், எலக்ட்ரான்கள் ஒரு மின்கலத்திலிருந்து ஆற்றல் வெளிப்படுவது போல வெளியிடப்படுகின்றன.
- இந்தச் செயல்முறையானது உணவை உடைத்து அந்த உயிரினங்கள் உயிர் வாழ உதவுகிறது.

Post Views:
44