April 10 , 2026
2 days
74
- நெடுந்தொலைவுப் பயணத்திற்குப் பிறகு, நர்கொண்டம் தீவில் வெள்ளை உள்ளான் பறவை ஒன்று காணப்பட்டது.
- தெற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து சுமார் 7,400 கி.மீ பயணம் செய்து இப்பறவை தனது வலுவான இடப்பெயர்வுத் திறனை வெளிப்படுத்தியுள்ளது.
- வெள்ளை உள்ளான் (காலிட்ரிஸ் ஆல்பை) என்பது மணல் நிறைந்த கடற்கரைப் பகுதிகளில் காணப்படும் ஒரு சிறிய, வேகமான கடற்கரைப் பறவையாகும்.
- இது இனப்பெருக்கப் பகுதியான ஆர்க்டிக் மண்டலத்திற்கும், குளிர்கால வாழிடங்களுக்கும் இடையே 3,000 முதல் 10,000 கி.மீ வரை இடம் பெயர்கிறது.
- IUCN செந்நிறப் பட்டியலில் இது தீவாய்ப்பு கவலை குறைந்த இனம் எனும் நிலையில் உள்ளது, இருப்பினும், வாழிட இழப்பு இதற்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
Post Views:
74