அருணாச்சலப் பிரதேசத்தின் லோஹித் ஆற்றில் முன்மொழியப்பட்டுள்ள 1,200 மெகாவாட் (MW) நீர்மின் திட்டமானது, மிகத் தீவிரமாக அழிந்து வரும் வெள்ளை வயிற்று நாரையின் (ஆர்டியா இன்சிக்னிஸ்) வாழிடத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள லோஹித் ஆற்றுப் படுகையானது இந்தியாவின் வெள்ளை வயிற்று நாரை இனங்களில் சுமார் 70%-ஐ ஆதரிக்கிறது, ஆனால் நாட்டில் தற்போது 6-9 நாரைகள் மட்டுமே எஞ்சியுள்ளன.
இந்த உயிரினமானது 2007 ஆம் ஆண்டு முதல் IUCN செந்நிறப் பட்டியலில் மிக அருகி வரும் இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் இது 1972 வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் அட்டவணை I இன் கீழ் பாதுகாக்கப்படுகிறது.
முன்மொழியப்பட்டுள்ள இந்த அணையானது ஆற்று நீரோட்டம், நீரின் கலங்கல் தன்மை மற்றும் ஆற்றங்கரைக் காடுகளை மாற்றி, பறவையின் உணவு மற்றும் கூடு கட்டும் வாழிடங்களைப் பாதிக்கலாம்.
லோஹித் ஆற்றுப் படுகையில் வெள்ளை வயிற்று நாரை இருந்தாலும், இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டில் (EIA) அது சேர்க்கப்படவில்லை.