TNPSC Thervupettagam

வேகமாக சுருங்கும் இரும விண்மீன் - eRASSU J0608

September 27 , 2026 4 days 60 0
  • இந்திய தலைமையிலான வானியலாளர்கள் eRASSU J060839.5–704014 (eRASSU J0608) என்ற ஒன்றை ஒன்று சுமார் 6.2 நிமிடங்களில் சுற்றி வரும் ஒரு ஜோடி வெள்ளை குறுமீன்களை அடையாளம் கண்டுள்ளனர்.
  • இது ஒரு மிகச்சிறிய இரட்டை வெள்ளை குறுமீன் இரும அமைப்பாகும், இதன் சுற்றுப்பாதை வினாடிக்கு 4.7 × 10⁻¹¹ வினாடிகள் என்ற அளவில் சுருங்கி வருகிறது.
  • வெள்ளை குறுமீன்கள் என்பவை சூரியனைப் போன்ற விண்மீன்கள் தங்களது அணுக்கரு எரிபொருளைப் பயன்படுத்தி முடித்து தங்களது வெளி அடுக்குகளை இழந்த பிறகு உருவாகும் அடர்த்தியான எச்சங்களாகும்.
  • ஒரு வெள்ளை குறுமீனிலிருந்து வரும் பொருளானது நேரடித் தாக்கத்தின் மூலம் மற்றொன்றை நேரடியாகத் தாக்கலாம், இது வலுவான எக்ஸ்-கதிர் உமிழ்வை உருவாக்குகிறது.
  • நாசாவின் NICER, ஐன்ஸ்டீன் ப்ரோப் மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் (ESA) XMM-நியூட்டன் ஆய்வகங்கள் சுமார் 3.5 ஆண்டுகள் இந்த அமைப்பை ஆய்வு செய்யப் பயன்படுத்தப் பட்டன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்