வேட்டையாடுபவர்களைக் கண்டுபிடிப்பதற்கானப் பணியில் நாய்கள்
November 29 , 2022 990 days 444 0
இந்தியாவில் முதல் முறையாக வேட்டையாடுபவர்களைக் கண்டுபிடிப்பதற்காக அனுப்பப் பட்ட நாய் சோர்பா சமீபத்தில் உயிரிழந்தது.
12 வயதான இந்த ஆண் பெல்ஜியன் மாலினோயிஸ் வகை நாயானது, வனவிலங்குக் குற்றங்களை எதிர்த்துப் போராடும் ‘K9’ எனப்படும் நாட்டின் முதல் நாய்ப் படைப் பிரிவின் உறுப்பினராக இருந்தது.
60க்கும் மேற்பட்ட வேட்டையாடுபவர்களைப் பிடிப்பதில் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு உதவிய பெருமைக்குரிய ஜோர்பா, இந்தப் படைப்பிரிவில் இடம் பெற்ற முதல் நாயாகும்.
K9 படைப்பிரிவானது, ஆறு பெல்ஜிய மாலினோயிஸ் நாய்கள் மற்றும் அவற்றின் பயிற்றுனர்களை உள்ளடக்கியது.