சென்னையில் 'வேர்களைத் தேடி' கலாச்சாரச் சுற்றுப்பயணத்தின் நான்காவது கட்டத்தை முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
2023 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் நடைபெற்ற தமிழ் கலாச்சார நிகழ்வில் தொடங்கப் பட்ட இந்த முன்னெடுப்பின் கீழ், புலம்பெயர்ந்த தமிழ் இளைஞர்கள் ஆண்டுதோறும் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாட்டிற்கு அழைத்து வரப்படுகிறார்கள்.
மரபுகளின் பரிமாற்றம் மற்றும் உள்ளார்ந்த கற்றல் மூலம் தமிழ் பாரம்பரியத்துடன் ஆன தங்கள் உறவினை வலுப்படுத்துவதே இதன் குறிக்கோள் ஆகும்.
இந்த ஆண்டு, 14 நாடுகளைச் சேர்ந்த 99 புலம்பெயர்ந்த தமிழ் இளைஞர்கள் ஆகஸ்ட் 01 முதல் 15 ஆம் தேதி வரையில் தமிழ்நாடு முழுவதும் வரலாற்று மற்றும் கலாச்சாரத் தளங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்வார்கள்.
இந்த நிகழ்வின் பங்கேற்பாளர்கள் தமிழ் வரலாறு, வாழ்க்கை முறை, கலைகள், கட்டிடக்கலை, நீர் அமைப்புகள் மற்றும் ஆடை நுட்பங்கள் குறித்து ஆராய்வார்கள், மேலும் அறிஞர்கள் மற்றும் நிபுணர்களுடன் தொடர்புகொள்வார்கள்.
இந்த சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, அவர்கள் தங்கள் நாடுகளில் தமிழ் அடையாளத்தையும், தமிழர்களின் பெருமையையும் ஊக்குவிப்பதற்கான கலாச்சாரத் தூதர்களாகத் திரும்புவார்கள்.