August 26 , 2019
2180 days
1174
- திறன்களின் ஒலிம்பிக் என்றழைக்கப்படும் வேர்ல்டுஸ்கில் நிகழ்வு எனும் உலகளாவிய திறன் போட்டியின் 48வது பதிப்பு ரஷ்யாவின் கசானில் தொடங்கவுள்ளது.
- இது உலகின் மிகப்பெரிய சர்வதேச தொழில் திறன் போட்டியாகும்.
- இந்நிகழ்வில் பங்கேற்கும் 63 நாடுகளில், 48 பங்கேற்பாளர்களுடன் பங்கேற்கும் இந்தியாவும் ஒன்றாகும்.
வேர்ல்டுஸ்கில் நிகழ்வு
- வேர்ல்டுஸ்கில் ஆனது தொழில்திறன்களுக்கான உலக சாம்பியன்ஷிப்பை ஏற்பாடு செய்கின்றது.
- இது ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும்.
- முன்னதாக சர்வதேச தொழிற்பயிற்சி அமைப்பு என்றழைக்கப்பட்ட வேர்ல்ட்ஸ்கில்ஸ் இன்டர்நேஷனல் ஆனது 1940களில் நிறுவப்பட்டது.
- இரண்டாம் உலகப் போரினால் பேரழிவிற்குள்ளான சில பொருளாதாரங்களில் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்தின் விளைவாக இது உருவானது.
- இது தற்போது 79 உறுப்பினர் நாடுகளையும் பிராந்தியங்களையும் கொண்டது.

Post Views:
1174