"இந்தியாவின் வேலைவாய்ப்பு வாய்ப்புகள்: வேலை வாய்ப்புகளுக்கான பாதைகள்" (India’s Employment Prospects: Pathways to Jobs) என்ற தலைப்பிலான ஓர் அறிக்கை தேசியப் பயன்பாட்டுப் பொருளாதார ஆராய்ச்சி சபையினால் (NCAER) வெளியிடப்பட்டது.
சிறு நிறுவனங்களின் திறமையான பணியாளர்கள் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலம் இந்தியாவில் கணிசமான வேலைவாய்ப்பை உருவாக்க முடியும் என்று ஆய்வு கண்டறிந்துள்ளது.
கடன் பெறுவதில் சுமார் 1% அதிகரிப்பு கூட எதிர்பார்க்கப்படும் பணியமர்த்தப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை 45% அதிகரிக்கிறது.
டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் நிறுவனங்கள், அத்தகைய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தாத நிறுவனங்களை விட 78% அதிகத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துகின்றன.
உழைப்பு மிகுந்த உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் வேலைவாய்ப்புகளை வலுப் படுத்துவது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை சுமார் 8 சதவீதத்தில் நிலை நிறுத்த உதவும்.
முறையாக திறம் பெற்றப் பணியாளர் வளத்தினை 9-12% புள்ளிகள் அதிகரிப்பது 2030 ஆம் ஆண்டளவில் சுமார் 9.3 மில்லியன் கூடுதல் வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம் அல்லது வேலைவாய்ப்பில் 13% அதிகரிப்பை ஏற்படுத்தலாம்.