வேலைவாய்ப்பு மற்றும் சமூகப் போக்குகள் அறிக்கை 2026
January 22 , 2026 50 days 119 0
சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வேலைவாய்ப்பு மற்றும் சமூகப் போக்குகள் அறிக்கை 2026 எனும் அறிக்கையை வெளியிட்டது.
2026 ஆம் ஆண்டில் உலகளாவிய வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.9% ஆக (சுமார் 186 மில்லியன் வேலைவாய்ப்பற்ற மக்கள்தொகை) இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பின்மைக்கு அப்பால், உலகளாவிய வேலைவாய்ப்பு இடைவெளியானது வேலைக்குச் செல்ல விரும்பும் ஆனால் அதை அணுக முடியாத அளவில் 408 மில்லியன் மக்களை எட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
உலகளவில் ஒரு நாளைக்கு 3 அமெரிக்க டாலர்களுக்கும் குறைவாக சம்பாதிக்கின்ற சுமார் 284 மில்லியன் தொழிலாளர்கள் தீவிர வறுமையில் வாழ்கின்றனர்.
உலகம் முழுவதும் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் முறைசாரா வேலையில் உள்ளனர்.
இளைஞர் வேலைவாய்ப்பின்மை சுமார் 12.4% ஆகும் என்பதோடுமேலும் ஆண்களை விட 24% குறைவானப் பங்கேற்புடன் உலகளாவிய வேலைவாய்ப்பில் ஐந்தில் இரண்டு பங்கு மட்டுமே பெண்கள் பெறுகின்றனர்.