TNPSC Thervupettagam

வேலைவாய்ப்பு மற்றும் சமூகப் போக்குகள் அறிக்கை 2026

January 22 , 2026 4 days 50 0
  • சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வேலைவாய்ப்பு மற்றும் சமூகப் போக்குகள் அறிக்கை 2026 எனும் அறிக்கையை வெளியிட்டது.
  • 2026 ஆம் ஆண்டில் உலகளாவிய வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.9% ஆக (சுமார் 186 மில்லியன் வேலைவாய்ப்பற்ற மக்கள்தொகை) இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
  • வேலைவாய்ப்பின்மைக்கு அப்பால், உலகளாவிய வேலைவாய்ப்பு இடைவெளியானது வேலைக்குச் செல்ல விரும்பும் ஆனால் அதை அணுக முடியாத அளவில் 408 மில்லியன் மக்களை எட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • உலகளவில் ஒரு நாளைக்கு 3 அமெரிக்க டாலர்களுக்கும் குறைவாக சம்பாதிக்கின்ற சுமார் 284 மில்லியன் தொழிலாளர்கள் தீவிர வறுமையில் வாழ்கின்றனர்.
  • உலகம் முழுவதும் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் முறைசாரா வேலையில் உள்ளனர்.
  • இளைஞர் வேலைவாய்ப்பின்மை சுமார் 12.4% ஆகும் என்பதோடு மேலும் ஆண்களை விட 24% குறைவானப் பங்கேற்புடன் உலகளாவிய வேலைவாய்ப்பில் ஐந்தில் இரண்டு பங்கு மட்டுமே பெண்கள் பெறுகின்றனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்