கிராமப்புறங்களில் உள்ள இளம் தொழில் முனைவோர்களின் வேளாண் சார்ந்த புத்தொழில்களை ஊக்குவிப்பதற்காக வேளாண்மைத் துறை ஊக்க நிதி நிறுவப்பட உள்ளது.
விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு வேண்டி புதுமை மிக்க மற்றும் மலிவு விலையிலான தீர்வுகளை வழங்குவதை இந்த நிதியம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
வேளாண் நடைமுறைகளை மாற்றுவதற்கும், உற்பத்தித் திறன் மற்றும் இலாபத்தை அதிகரிப்பதற்கும் இது நவீனத் தொழில்நுட்பங்களை இத்துறையில் அறிமுகப்படுத்த உள்ளது.
வேளாண்மைக்கான பொது எண்ணிம உள்கட்டமைப்பானது, பொது மக்களின் பயன்பாட்டிற்காகத் தடையற்ற வளங்கள், ஒப்பற்றத் தரத்திலான மற்றும் தரவுப் பரிமாற்றங்களை மேற்கொள்ளக் கூடிய ஒரு தளமாக உருவாக்கப் பட உள்ளது.