உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஆனது, "வேளாண் உணவு முறைகளில் இளையோர்களின் நிலை" குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
குறைவான வருமானம் கொண்ட நாடுகளில் அதிகச் சார்பு நிலை இருந்த போதிலும், வேளாண் உணவு முறைகளில் 2005 ஆம் ஆண்டில் சுமார் 54% ஆக இருந்த இளையோர் வேலைவாய்ப்பு 44% ஆகக் குறைந்துள்ளது.
15 முதல் 24 வயதுடைய உலகளாவிய இளைஞர்களில் சுமார் 20 சதவீதத்திற்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பு, கல்வி அல்லது பயிற்சியில் (NEET) ஈடுபடவில்லை என்பதோடு இதே போன்றச் சூழலில் பெண்களும் இரு மடங்கு அதிகமாகப் பாதிக்கப் படுகின்றனர்.
வேளாண் உணவு முறைகள் 45% என்ற அளவிற்குப் பங்களிப்பதுடன், இளைஞர்களின் NEET நிலையை நீக்குவது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியை 1.4%, சுமார் 1.5 டிரில்லியன் டாலர் அதிகரிக்கக்கூடும்.
நகர்ப்புற இளையோர்களின் பங்கேற்பு தற்போது சுமார் 54% ஆக உள்ள நிலையில், கிராமப்புற இளைஞர்களில் 5% மட்டுமே தொழில்துறை வேளாண் உணவு முறைகளில் பங்கேற்கின்றனர் என்பதோடு இது எதிர்காலத் தொழிலாளர் வளத்தின் மிகப்பெரும் பற்றாக்குறையைக் குறிக்கிறது.