வேளாண்மை, பால்வளம், மீன்வளத் துறைகளில் தமிழ்நாட்டின் சாதனைகள்
May 21 , 2025 14 hrs 0 min 43 0
இந்த மாநிலத்தின் சராசரி வேளாண் வளர்ச்சியானது, 2021 முதல் 2024 ஆம் ஆண்டு வரையில் சராசரியாக 5.66% சாதனை அளவை எட்டியுள்ளது.
2012-13 மற்றும் 2020-21 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இது 1.36% ஆக இருந்தது.
இம்மாநிலத்தில் 2020-21 ஆம் ஆண்டில் 36.07 லட்சம் ஹெக்டேராக இருந்த நீர்ப்பாசனப் பரப்பளவு ஆனது 2023-24 ஆம் ஆண்டில் 38.33 லட்சம் ஹெக்டேராக அதிகரித்தது.
தமிழ்நாடு மாநிலமானது கேழ்வரகு மற்றும் கொய்யா உற்பத்தியில் இந்தியாவில் முதலிடத்தில் இருந்தது.
மக்காச்சோளம், கரும்பு, புளி, மரவள்ளிக் கிழங்கு, மல்லிகை மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தித் திறனில் தமிழகம் நாட்டிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 10,187 கிராமப் பஞ்சாயத்துகளில் 47,286 ஏக்கர் தரிசுநிலங்கள் சாகுபடி நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன.
வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ், 62,820 விவசாயிகளுக்கு 499.45 கோடி ரூபாய் மதிப்புள்ள வேளாண் இயந்திரங்கள் மற்றும் அதன் கருவிகள் மானியத்துடன் விநியோகிக்கப்பட்டன.
மொத்தம் 1,652 புதிய வேளாண் இயந்திரங்கள் வாங்கப்பட்டு, இணைய வழி வாடகைச் சேவை மூலம், சுமார் 69,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
27 மாவட்டங்களில் சுமார் 900க்கும் மேற்பட்ட குளங்கள் 1,212 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப் பட்டுள்ளன.
814 சிறு நீர்ப்பாசன குளங்கள் புதுப்பிக்கப்பட்டு, 24 மாவட்டங்களில் 88க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.
2018-19 ஆம் ஆண்டில் 8,362 மெட்ரிக் டன்னாக இருந்த பால் உற்பத்தியானது, 2023-24 ஆம் ஆண்டில் 10,808 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டுள்ளது.
2018–2019 ஆம் ஆண்டில் 1,884.22 கோடி ரூபாயாக இருந்த வருடாந்திர முட்டை உற்பத்தி ஆனது, 2023–24 ஆம் ஆண்டில் 2,233.25 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மீன்வளத் துறையில், மாநில அரசானது 1,428 கோடி ரூபாய் செலவில் 72 புதிய மீன்பிடி துறைமுக மையங்களை நிறுவியுள்ளது.