வேளாண்மை 2022 - விவசாயிகளின் வருமானத்தை இரட்டித்தல்
February 18 , 2018 2861 days 1043 0
புதுதில்லியில் அமைந்துள்ள தேசிய வேளாண்மை அறிவியல் கழகத்தில் (National Agriculture Science Complex-NASC) “வேளாண்மை 2022 - விவசாயிகளின் வருமானத்தை இரட்டித்தல்” என்ற தலைப்பிலான தேசிய மாநாடு, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சகத்தால் நடத்தப்பட்டது.
வேளாண்துறை சந்திக்கும் சவால்களைப் பற்றி விவாதிக்கவும், அரசின் இலக்கான விவசாயிகளின் வருமானத்தை 2020ல் இரட்டிப்படையச் செய்வதற்கான ஒரு திட்டத்தை வரையறுக்கவும் இந்த மாநாடு நடத்தப்பட்டது.
இந்த மாநாடு விவசாயிகள் நலன் சார்ந்த ஏழு முக்கியமான கருத்துருக்களில் கவனம் செலுத்தும். இந்த மாநாட்டின் பரிந்துரைகள் அரசின் திட்டத்தோடு (e-NAM) இணைக்கப்படும்.
ஏழு முக்கியக் கருத்துருக்கள்
பயிர் உற்பத்தியை அதிகரித்தல்
சாகுபடி செலவுகளைக் குறைத்தல்
அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்புகளைக் குறைத்தல்
விவசாய சந்தைகள் சீர்திருத்தம்
உணவு பதப்படுத்துதல் வழியாக வேளாண் பொருட்களின் மதிப்பை அதிகரித்தல்.
பயிர் காப்பீடு மூலமாக ஆபத்தைக் குறைத்தல் (Risk Mitigation); பேரிடர் நிவாரணம்.
தோட்டக்கலைத் துறை, கால்நடை வளர்ப்பு போன்ற இணைந்த நடவடிக்கைகளை மேம்படுத்துவது.