TNPSC Thervupettagam

வேளாண்-ஒளிமின்னழுத்தங்கள் உலகளாவிய மாநாடு 2026

October 24 , 2026 15 hrs 0 min 14 0
  • 2026 ஆம் ஆண்டிற்கான 7-வது வேளாண்-ஒளிமின்னழுத்தங்கள் உலகளாவிய மாநாட்டை இந்தியா புது தில்லியில் நடைபெறுவதுடன் இம்மாநாடு உலகளாவிய தெற்கில் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.
  • வேளாண்-ஒளிமின்னழுத்தங்கள் (AgriPV) என்பது ஒரே நிலத்தில் விவசாயம் மற்றும் சூரிய ஒளிமின்னழுத்த மின் உற்பத்தி ஆகியவற்றை இணைப்பதுடன் விவசாயம் மற்றும் சூரிய ஆற்றல் உற்பத்தி ஆகிய இரண்டையும் ஒன்றாக அனுமதிக்கிறது.
  • இம்மாநாட்டின் கருத்துரு “Powering the Global South” என்பதாகும். இது பயிர் உற்பத்தித் திறன், கொள்கைகள், நிதியுதவி மற்றும் தூய்மையான ஆற்றல் மற்றும் உணவு உற்பத்திக்கான விவசாயிகளை மையமாகக் கொண்ட மாதிரிகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் (MNRE) இம்மாநாட்டை நடத்துகிறது.
  • இம்மாநாட்டில் AgriPV கொள்கைக் கையேடு (AgriPV Policy Handbook), இந்திய வேளாண்-ஒளிமின்னழுத்தக் கூட்டணியின் (IAA) முடிவெடுக்கும் கருவி மற்றும் சர்வதேச நீர் மேலாண்மை நிறுவனத்தின் (IWMI) சுருக்கங்களின் புத்தகம் ஆகியவை வெளியிடப் பட்டன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்