இந்திய வானிலை ஆய்வு மையமானது வேளாண் தானியங்கு வானிலை மையங்களை நிறுவியுள்ளது.
மக்களுக்கு, குறிப்பாக விவசாயிகளுக்கு வானிலை முன்னறிவிப்பினை வழங்குவதற்காக வேண்டி இந்த மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கட்டமைப்பின் கீழ் இயங்கும் கிருஷி விஞ்ஞான் கேந்திர மையங்களில் அமைந்துள்ள மாவட்ட வேளாண் வானியல் மைய அலகுகளில் இது நிறுவப்பட்டுள்ளது.
கிராமின் கிருஷி மௌசம் சேவா எனும் திட்டத்தின் கீழ் வட்டார அளவிலான வேளாண் வானியல் ஆலோசகச் சேவைகளை வழங்குவதற்காக வேண்டி 200 மாவட்ட வேளாண் வானியல் மையங்களில் வேளாண் தானியங்கு வானிலை மையங்கள் நிறுவப் பட்டு உள்ளன.