தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகமானது வேளாண் தொழிலாளர்கள் மத்தியில் நிலவும் தற்கொலை நிகழ்வுகள் குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில் தற்கொலையினால் உயிரிழந்த வேளாண் தொழிலாளர்களின் எண்ணிக்கையானது முந்தைய ஆண்டை விட 18% அதிகமாகும்.
2020 ஆம் ஆண்டில் மொத்தமாக வேளாண் துறையைச் சேர்ந்த 10,677 பேர் தற்கொலையினால் உயிரிழந்தனர்.
பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் வருவாய் உதவியின் கீழ் நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள், பெருந்தொற்றுக் காலத்தின்போது அதிகளவு துயரங்களை எதிர்கொண்டிருக்கலாம்.
வேளாண் தொழிலாளர்களின் தற்கொலை எண்ணிக்கையில் 15% அதிகரிப்பு உட்பட, 4006 தற்கொலைகள் என்ற ஒரு எண்ணிக்கையுடன் மகாராஷ்டிரா மாநிலம் மிக மோசமான நிலையில் உள்ளது.
மோசமான நிலையிலுள்ள பிற மாநிலங்களாவன: கர்நாடகா (2016), ஆந்திரப் பிரதேசம் (899) மற்றும் மத்தியப் பிரதேசம் (735) ஆகும்.
கர்நாடக மாநிலத்தில் 2020 ஆம் ஆண்டில் வேளாண் தொழிலாளர்களின் தற்கொலை எண்ணிக்கையானது 43% உயர்ந்துள்ளது.