TNPSC Thervupettagam

வைப்புத் தொகை காப்பீடு மற்றும் கடன் உத்திரவாதக் கழகம் (திருத்தம்) மசோதா, 2021

August 15 , 2021 1454 days 650 0
  • இந்த மசோதாவானது சமீபத்தில் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • இந்த மசோதாவானது 1961 ஆம் ஆண்டின் வைப்புத் தொகை காப்பீடு மற்றும் கடன் உத்திரவாதக் கழகச் சட்டத்தினைத் திருத்தி அமைக்க உள்ளது.
  • ஒரு வைப்புத் தொகையாளருக்கு மீது அவர்களின் வங்கி வைப்புத் தொகையை அணுகுவதற்குத் தடை விதிக்கப் பட்டிருந்தால், அவர்களின் காப்பீட்டுத் தொகையை அணுகுவதற்கு கால வரம்பிற்கு உட்பட்ட அனுமதியினைப் பெற்றிட இந்த மசோதா வழிவகை செய்கிறது.
  • இந்தக் காப்பீட்டு வைப்புத் தொகையை இடைக்கால அடிப்படையில் வைப்புத் தொகையாளர்களுக்குச் செலுத்துவது அக்கழகத்தின் பொறுப்பு என இந்த மசோதா கூறுகிறது.
  • இக்கழகம் இந்த வைப்புத் தொகையை அதற்கான தேவை எழுப்பப் பெற்ற 90 நாட்களுக்குள் வைப்புத் தொகையாளர்களுக்கு வழங்கிட வேண்டுமென இம்மசோதா வரையறுத்துள்ளது.
  • இந்த மசோதா குறித்து உரையாற்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காப்பீட்டு வரம்பானது ஒரு லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்