வைரஸ் கல்லீரல் அழற்சியின் கட்டுப்பாட்டிற்கான தேசிய திட்டம்
April 26 , 2018 2679 days 1031 0
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகமானது (ministry of health and family welfare) 2018-19 ஆம் நிதி ஆண்டிலிருந்து வைரஸ் கல்லீரல் அழற்சியின் கட்டுப்பாட்டிற்கான தேசிய திட்டத்தை (National Programme for Control of Viral Hepatitis) வெளியிட உள்ளது.
இதற்காக வேண்டி அடுத்த மூன்று ஆண்டு காலத்திற்கு ரூ.600 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில்2 கோடி மக்கள் ஹெபடைடிஸ்-சி (Hepatitis C) வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஹெபடைடிஸ்-சி வைரஸினால் உண்டாகும் கல்லீரல் அழற்சியை குணப்படுத்த எந்தவொரு அறியப்பட்ட தடுப்பூசியும் தற்போது இல்லை. ஹெபடைடிஸ்-பி ஆனது பாலுறவு தொடர்பு வழியாக பரவ வல்லது. ஆனால் ஹெபடைடிஸ்-சி பாலுறவு தொடர்பு வழியே பரவாது.
ஹெபடைடிஸ்-சி வைரஸானது கல்லீரலை பாதிக்கக்கூடிய இரத்தவழி பரவு வைரஸ் ஆகும். (blood-borne virus)
உட்செலுத்தக் கூடிய ஊசிகளின் பயன்பாடு, பாதுகாப்பற்ற ஊசி செலுத்துதல் நடைமுறைகள், பாதுகாப்பற்ற சுகாதார சிகிச்சை, பரிசோதிக்கப்படாத இரத்தம் மற்றும் இரத்தப் பொருட்களின் பரிமாற்றம் ஆகியவற்றின் வழியே ஹெபடைடிஸ்-சி வைரஸ் பரவுகின்றது.
ஹெபடைடிஸ்-சி வைரஸிற்கான உலக சுகாதார மையத்தின் புதிய சிகிச்சை வழிகாட்டுதல்களின் கீழ், ஹெபடைடிஸ்-சி வைரஸிற்கான மருந்துப் பொருளாக சோபோஸ்புவிர் (Sofosbuvir) எனும் மருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அனைத்து வகையான ஹெபடைடிஸ்-சி நோயாளிகளுக்கும் ஹெபடைடிஸ்-சி (Hepatitis-C) என்ற கல்லீரல் அழற்சி நோய்க்கு வாய்வழியே உட்கொள்ளத்தக்க மருந்துகளைக் (Oral Medicine) கொண்டு சிகிச்சை அளிக்கவல்ல நாட்டின் முதல் மாநிலமாக ஹரியானா உருவாகியுள்ளது..
இதற்காக முதல் முறையாக ஹரியானா மாநிலம் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வாய்மொழியாக உட்கொள்ளும் ஹெபடைடிஸ்-சி நோய்க்கான மருந்துகளை அறிமுகம் செய்துள்ளது.
கல்லீரல் அழற்சி என்பது கல்லீரலில் உள்ள செல்கள் வீக்கத்துடன் காணப்படும் நிலை ஆகும். நோய் தொற்றின் வகையைப் பொறுத்து உடலில் உண்டாகும் சிக்கல்கள் வேறுபடும்.
ஹெபடைடிஸ் வகை வைரஸ்களால் இந்நோய் ஏற்படுகிறது.
ஒவ்வொரு கல்லீரல் அழற்சி வகை நோயும் வெவ்வேறு ஹெபடைடிஸ் வைரஸ் தாக்குதலால் ஏற்படுகிறது. கல்லீரல் அழற்சி / ஹெபடைடிஸ் ஐந்து வகைப்படும். அவை,